அருள் நூல் 541 - 570 of 2738 அடிகள்

அருள் நூல் 541 - 570 of 2738 அடிகள்

arul-nool

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
கண்ணுச்சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
வில்லு கொண்டே எய்துவிட்டேன் நம்முடைய
விசயன் சான்றோர் நன்றாய் தழைத்துவாழ
பார்த்துவிட்டேன் இரண்டுகண்ணுங்கொண்டு நம்முடைய
பத்தினி மக்கள் நன்றாய் தழைத்துவாழ
மலைக்கன்னிமார் தங்காவில் பெற்ற நம்முடைய
மக்கள் வலியசீமை கட்டி அரசாளவாழ
தர்மருட குலத்தி லுள்ள நம்முடைய
தெய்வச்சான்றோர்கள் நன்றாய் தழைத்துவாழ
கோத்தி ரத்து சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய் தழைத்துவாழ
கோட்டைத்தளம் மதிலிடித்து வாழநம்முடைய மக்கள்
கோடிச் சீமைக்கட்டி அரசாள வாழ
ஆல்போல தழைத்து வாழ நம்முடைய
ஐவர் மக்கள் சீமைகட்டி அரசாள வாழ
பயலுடைய தரமறுத்துப் பண்டாரஞ் சீமையான
மக்கள் நன்றாய் தழைத்துவாழ,

தானநிறைவு வாசகம்


கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன்
தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன்
சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
பிரமனை அடுத்ததுக்காக பூவண்டன்மாவர் காவிக்கொள்ள
பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவ அரகர அரகரா
ஆண்டியும் ஆண்டிச்சியுங்கூடி அழித்துவரும்போது
அன்புள்ள பக்தரை ஆல்போல் தழைக்க வைப்பதும்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

சாட்டு நீட்டோலை


சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல்
தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi