அருள் நூல் 1801 - 1830 of 2738 அடிகள்
விருத்தம்
சீரணி மாயன்றானும் தெட்சணம் மீதில்வந்து
காரணமான கன்னிமார்கள் ஏழுபேரை
நாரணம் முகூர்த்தம் செய்ய நாடோருகுடைக்குள் ஆண்ட
காரணம் தன்னைக் கூறகமலப் பூமகளேகாப்போம்
நடை
சீரானகன்னியர்கள் சிவலோகம் சிவனார்க்குபூசைசெய்து
நேராய்மிகவிருக்க அந்த நேரிளைகன்னிமார் ஏழுபேர்களும்
நாராணயர்தொடர்ந்து அந்தநல்லவனத்தில் சுனையருகில்
ஆரார்மிகவறியார் அருவனம் பூஞ்சுனையானதிலே
போகாவவ்விடம்தனிலே அந்தப் பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை
வாயால்தொகுத்து உரைக்கயிந்த வையகமதில் யாதுளதோ
தேவர்மிகப்போகார் தெய்வேந்திரன் வானவர்போகவறிவார்
மூவரும்போகறியாரி முனிசித்தாதிமார்களும் போகறியார்
ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக்கரையானதிலே
ஆலிலைமேல்துயிலும் நல்லவச்சுதன்பச்சைமாலங்கே சென்று
ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலதின்மேல்
ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னிஏழுபேரும்
குளித்தோடி அக்கரையில்வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே
காணார்துகில்தனையும் கருமேகத்தைநோக்கிய ஆலமரத்தை
அண்ணாந்தவர்பார்த்து ஆடையைபார்க்கவே நோக்குவேளை
கண்டாரே ஆலமரத்தல் அவர்க்கானது கிலடையாளமென்று
கொண்டாடி கன்னியர்கள் கோ!கோ!கோ! என்ன கொடுமையென்பர்
எடுத்தாரைக்கண்டிலமே இதுஎன்மாயமோ பெண்ணரசே
கடுத்தானகற்பினையோயிது கம்மாயோ பெண்கன்னியரே
பூமிதனிலிருந்தும்நம்பொற்றுலகில் ஆலில்பறந்தென்ன
சுவாமிசிவனர்க்கு பொல்லாத தோசத்தை செய்தோமோ
கர்மவிதிப்பயனோ வேதன்கட்டளையிட்டபடிதானோ
நம்துகில்பற்து நடு ஆலமரத்திலே போயிருக்க
என்னவிதிப்பயனோ எடுத்தோரை கண்டிலோமி; பெண்ணரசே
உன்னியெடுப்பதற்கு ஒருஆளையிங்குகண்டிலோம்
என்றேமிகப்புலம்பி கன்னியேழுபேரும் மிகத்திரண்டு
விளக்கவுரை :
அருள் நூல் 1801 - 1830 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi