அருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்
வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க
விளக்கவுரை :
அருள் நூல் நிறைந்தது
அருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi