அருள் நூல் 571 - 600 of 2738 அடிகள்
ஓதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுந் தாணிக்கும்
ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா
தெச்சணமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து
தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா
முப்பத்து முக்கோடி தேவரிஷியுடனே
முனியும்வந்த தெடுத்தாரே சிவனே அய்யா
மாமுனி தாயுடனே வழியே நளடந்துவர
மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா
திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல
திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா
அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து
அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா
கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா
கடலும் முழங்கிட துறவர் வணங்கியென்னைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா
இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த
வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா
இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி
என்னையும் விடும்போது சிவனே அய்யா
கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை
காகமும் கண் டேனையா சிவனே அய்யா
கைகலங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக்
காட்டியும் தந்தாயே சிவனே அய்யா
வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல
வாழவும் பாவித்தாயே சிவனே அய்யா
நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி
ரகசியம் பற்றிவிட்டாய் சிவனே அய்யா
விளக்கவுரை :
அருள் நூல் 571 - 600 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi