அகிலத்திரட்டு அம்மானை 2551 - 2580 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2551 - 2580 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

என்தனக்கு மோட்சம் ஈயவேணுமெனவே
என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே
அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும்
எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக்
கனியான மோஷக் கயிலாச மேதருவேன்
என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை
அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு
ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்

விருத்தம்


இன்னவன் இனியான் என்று எவருமே அறியா என்னை
தன்னுடன் கூடவைத்து தார்மணி பொறுக்கிக் கோர்த்த
மன்னவன் செய்தநன்றி மறந்துநான் போவேனானால்
உன்னிய நரகந்தன்னில் விழவேஏது ஆகுமல்லோ

நடை

ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு
மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார்
நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான்
எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி
மெய்போக மான வியாசரை யுங்குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே

விருத்தம்

காரணமான மாயன் கலியுகம் வருமென்றெண்ணி
நாரணர் நடந்து மானாய் நல்மலை ஏறிப்போக
வாரணர் வில்வேடன் அம்பினால் எய்யப்பட்டு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi