அகிலத்திரட்டு அம்மானை 4681 - 4710 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4681 - 4710 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும்
அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும்
எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி
இருந்துபுத்தி இவன்தனக்கு யான் சொல்லாதிருந்தால்
மறுத்து உரைப்பான் மன்றீரேழும் அறிய
சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து
ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான்
ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல்
ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார்
அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து
செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு
மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார்
ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது
என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று
மன்று தனையளந்த மாயப் பெருமாளே
பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே
நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே
எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே
சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும்
என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு
கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல்
சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது
எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன்
வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன்
பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன்
ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன்
மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன்
ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன்
மேடை யறியேன் மெல்லியரை நானறியேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi