அகிலத்திரட்டு அம்மானை 6841 - 6870 of 16200 அடிகள்
தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி
இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து
மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு
எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால்
வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து
இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால்
அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே
செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும்
என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும்
நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம்
இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி
அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக
உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து
திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார்
நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே
தார்கெட்ட கலியில் தான்படைத்து அனுப்பிவைத்தோம்
இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர்
உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில்
நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால்
ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும்
மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி
எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே
செங்கருட வாகனவா தேவி மணவாளா
நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும்
சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே
எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில்
மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர்
பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால்
இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ
அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6841 - 6870 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi