அகிலத்திரட்டு அம்மானை 7021 - 7050 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7021 - 7050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
நானும்சிவமும் நல்தவசியிலே வருவோம்
நீனும் தவமிருந்த நிலமையதுகேட்டு
நாரணரை வைகுண்டமென நம்மகவாய் தானாக்கி
சீரான தெச்சணத்தில் சிறையும் இருக்கவைத்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi