அகிலத்திரட்டு அம்மானை 6421 - 6450 of 16200 அடிகள்
அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண்
என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி
எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு
நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல்
படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில்
நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே
என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே
அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார்
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பு இறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்
சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும்
நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம்
வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில்
பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச்
சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்
திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்
ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே
சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6421 - 6450 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi