அகிலத்திரட்டு அம்மானை 7111 - 7140 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7111 - 7140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்

சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு

அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாராயணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
முன்தோசத்தால் தேவன் முடியணிந்த இந்திரனைக்
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi