அகிலத்திரட்டு அம்மானை 6031 - 6060 of 16200 அடிகள்
அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும்
ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும்
நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு
ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும்
மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு
நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு
கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து
வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள்
கள்ளிப் பாலெடுத்து காலெல்லாம் பூசிக்கொண்டு
ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும்
கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள்
மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச்
சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள்
மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும்
இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள்
உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து
அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து
இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு
பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார்
கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர்
கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும்
உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர்
கண்டா லறிந்திடலாம் கானகத்திலே சிலரை
புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து
தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர்
புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர்
தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர்
பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால்
காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார்
உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6031 - 6060 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi