அகிலத்திரட்டு அம்மானை 6361 - 6390 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6361 - 6390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார்
என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா
என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே
நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார்
நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று
ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும்
மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை
வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும்
பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து
பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து
ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணைமறந்து
அன்ன மறந்து அதிக மணமறந்து
சொர்ண மறந்து சுகசோ பனமறந்து
நலமறந்து தேக நளினமிக மறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச்
சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய்
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே
என்று மகாமால் இப்படியே சொல்லிடவே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi