அகிலத்திரட்டு அம்மானை 6751 - 6780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6751 - 6780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே
இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ
கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ
இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால்
புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே
கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே
வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று
புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே
கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு
மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே
கன்னிப் பருவமதில் கைமோச மானதினால்
உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப்
பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச்
சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி
பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித்
தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே
எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும்
சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர்
நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில்
சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம்
எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன்
கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ
இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக்
கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம்
இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும்
மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும்
குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத்
திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும்
கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi