அகிலத்திரட்டு அம்மானை 5221 - 5250 of 16200 அடிகள்
அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான்
நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால்
என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன
போபோ நீதானும் போகு மிடந்தனிலே
நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை
அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே
இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை
அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்
போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில்
வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு
எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும்
நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா
எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து
வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி
நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப்
பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும்
நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித்
தாடாண்மை யான சத்தியமா யென்றனையும்
ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்
வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு
நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி
மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய
திரமான வாயு சேடன் முதலறிய
வருண னறிய மதியு மிகவறிய
தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன்
அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால்
பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்
என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான்
அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி
முந்து மூலப்பதியில் முகுந்தனாண்ட தலத்தில்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5221 - 5250 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi