அகிலத்திரட்டு அம்மானை 4531 - 4560 of 16200 அடிகள்
நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில்
பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன்
அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா
செப்போடு வொத்த சிவகாமி போலழகு
நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே
ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே
என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி
வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண்
ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று
மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை
அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி
இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில்
நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே
பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார்
என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும்
மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும்
திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப்
பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன்
ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி
ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும்
கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே
மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன்
மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து
அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க்
கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை
வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக்
கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச்
சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால்
தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே
வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4531 - 4560 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi