அகிலத்திரட்டு அம்மானை 5971 - 6000 of 16200 அடிகள்
எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே
மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில்
போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து
மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில்
இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து
எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று
உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று
எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்
சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு
சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து
மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே
நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழித் தென்மகவு
மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால்
நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்
நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ
ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம்
பாவலரே நீங்கள் பண்பாய் போயிருங்கோ
போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு
பிரமலோகத்தார் மனுப்பிறப்பு
கோவேங்கிரி ஆயன் கூறிவிடை கொடுத்தார்
பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை
வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார்
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5971 - 6000 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi