அகிலத்திரட்டு அம்மானை 2581 - 2610 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2581 - 2610 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

தாரணிக் கூட்டைப்போட்டு தனிவழி ஸ்ரீரங்கம் போகையிலே

நடை

வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே
ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு
மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை

சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்

அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோப னமரமும்
ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந் தனமரமும்
மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும்
தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது
சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை
தூல மின்னதென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல்
தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில்
வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi