அகிலத்திரட்டு அம்மானை 4321 - 4350 of 16200 அடிகள்
இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம்
சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே
நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக்
குளக்கரையில் கொண்டுவிட்டு கூடைஎடு என்றிடவே
குளக்கரையில் என்னைக் கொன்றாலும் தொடுவதில்லை
என்று சான்றோரில் இளையவனும் சொல்லிடவே
மன்றுதனையாளும் மன்னவனும் ஏதுரைப்பார்
வைகை யணையிலவன் வளர்த்தியில் குழிதோண்டி
கையைக் கீழ்வைத்து கழுத்துவரை மண்போட்டு
குட்டைதனில் மண்கோரி இவன்தலையில் வைஎன்றான்
குட்டைமண் தூக்கிவைத்தான் கண்ணீர் வழிந்ததுவே
பட்டத்துயானை கொண்டு தட்டினான் அவன் தலையை
தலையும் மிகஅற்று தண்ணீரில் தான்விழவே
குவையும் அந்தகெங்கைக் கொண்டுவந்து காத்திடுமாம்
பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான்
முன்போல் ஒருவனையும் முன்கூட்டி வாருமென்றான்
குட்டை யெடென்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம்
பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும்
சொன்ன இடத்தில் குழிதோண்டி வைகையிலே
அண்டையிலே மண்எடுத்து அவன்தலையிலேவைத்து
கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி
நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன்
கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை
பொய்கையிலே விழவே முத்தர் அதைக்கண்டு
வைகையிலே உன்னை வந்தெடுக்கும் நாள்வரைக்கும்
கெங்கையிலே இருவென்று கிருஷ்ணரும் வைத்துவிட்டு
வைகைக்கரைக்கு வரவென்று இருக்கையிலே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4321 - 4350 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi