அகிலத்திரட்டு அம்மானை 6541 - 6570 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6541 - 6570 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில்
பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும்
உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு
கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள்
ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத்
தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை
எம்மிடத்தில் இருக்கும் இயல்கணக்கு அத்தனையும்
சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி
சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும்
காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு
ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண்
ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா
ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும்
அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண்
முழித்து எழுந்து மூடொன்று தானாக்கி
முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப்
பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய்
இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால்
அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில்
அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக்
கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு

அம்மைமார் தவநிறைவு

என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே
சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள்
தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும்
உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி
கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi