அகிலத்திரட்டு அம்மானை 6571 - 6600 of 16200 அடிகள்
உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே
நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி
நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை
பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே
ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும்
ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள்
ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால்
பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை
மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே
சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும்
முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும்
மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள்
எனதுள் குடியிருக்கும் என்னுடைய நாயகமே
காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி
தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே
பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே
அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள்
என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே
அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார்
நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில்
செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார்
அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும்
ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே
அண்ணரே கோவே ஆதிநா ராயணரே
கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள்
தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய்
சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது
நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும்
ஆமான பதவி அருளவே வேணுமையா
என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6571 - 6600 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi