அகிலத்திரட்டு அம்மானை 4561 - 4590 of 16200 அடிகள்
வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி
சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை
அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி
இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ
அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ
வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம்
உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே
சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார்
அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர
இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள்
நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு
வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க
ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே
சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி
நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து
வடக்குக் கயிலாச வழியே வருகையிலே
வானோர்க்கு அருளல்
தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும்
வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும்
சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும்
தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில்
கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில்
இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று
மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே
வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம்
வந்தார்கள் அந்த வடகயிலை வந்திருந்து
சந்துமிகப்பேசி தானுரைப்பார் அப்போது
கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால்
அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான்
அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை
எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4561 - 4590 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi