அகிலத்திரட்டு அம்மானை 6211 - 6240 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6211 - 6240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான்
இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும்
அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து
இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக
பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில்
ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து
வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச்
செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
மனமாயுங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்
என்று பிரம இராச்சியத் தோர்களையும்
அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச்
சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை
வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள்
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை
அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி
எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே
ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள்
தாண்டவரே யினியுமது தயவி னருளாலே
என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில்
வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம்
என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi