அகிலத்திரட்டு அம்மானை 4471 - 4500 of 16200 அடிகள்
நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து
வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார்
மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால்
பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார்
அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு
இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா
நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு
வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை
பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி
மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல்
சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத்
தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து
பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து
ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய்
மாசணு காமல் மனதில் நமைத்துதித்து
ஓசை யுடனே உலக மதில்நீங்கள்
வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று
பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ
தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால்
வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம்
அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு
எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார்
நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம்
செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே
இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து
துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத்
தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத்
தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க
அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில்
எக்காள துர்க்கை
புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4471 - 4500 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi