அகிலத்திரட்டு அம்மானை 6271 - 6300 of 16200 அடிகள்
கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ
என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க
அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார்
தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி
மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம்
மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில்
பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே
நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே
ஏங்கக் கலியனுட இருளினா லையாவே
நியாம்நடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து
தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே
ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே
மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம்
என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள்
என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்
தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி
உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு
மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி
நானுங்க ளாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில்
தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6271 - 6300 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi