அகிலத்திரட்டு அம்மானை 6691 - 6720 of 16200 அடிகள்
வானத் தமிர்த மதுபா லமுதருந்தி
வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார்
ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான்
பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன்
அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார்
துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி
அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத்
தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும்
வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து
ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள்
சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள்
அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க
அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம்
நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில்
நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள்
சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை
மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால்
இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன்
பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது
சிக்கினால் நாமள் செடமெடுக்க நாளாகும்
மக்களுட துயரம் மாறாது என்றுசொல்லி
என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள்
அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார்
அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக
ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார்
அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே
பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது
கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து
உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து
வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6691 - 6720 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi