அகிலத்திரட்டு அம்மானை 6631 - 6660 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6631 - 6660 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து
வந்து மடவார் மறையொத்த மூவரையும்
சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக்
கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல்
மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக்
கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள்
சென்றோடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி

விருத்தம்

வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி
சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி
நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி
சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி

விருத்தம்

மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல
நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி
சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி
மாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி

விருத்தம்

மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி
தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே
காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற
தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி

விருத்தம்

மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா
காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல்
ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல்
வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே

விருத்தம்

தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல்
ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல்
சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு
வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே

நடை

அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே
மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே
தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi