அகிலத்திரட்டு அம்மானை 5431 - 5460 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5431 - 5460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க
இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப்
பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென
என்று சடைவாய் எம்பெருமாளும் உரைத்து
அன்னு பெருமாள் அருளுவார் தங்கையுடன்
நான்பட்ட பாட்டை நாடிஉன்னோடு உரைக்கையிலே
என்னோடு உரைத்தாயே ஈசர்படும் பாட்டையெல்லாம்
எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும்
நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே
வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க
பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ
நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும்
பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே
தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும்
வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ
காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ
ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார்
மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே
மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார்
வாளா யுதத்தாலே மாளானே மாகலியன்
தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான்
முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம்
இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை
உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே
அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே
ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண்
தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே
எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச்
சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே
தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi