அகிலத்திரட்டு அம்மானை 5281 - 5310 of 16200 அடிகள்
அப்படியே சிலைக்கு ஆனகுரு நாராயணரும்
இன்று போலெந்நாளும் மண்ணுக்கள்ளிருமென்று
அன்று சிலைக்கு ஆன நாராயணரும்
மும்மூர்த்தி எல்லாம் ஒருமூர்த்தி தானாகி
அம்மூர்த்தியாகி ஆதிவைகுண்டமென்று
வருவேன் கயிலை மாதரையும் மணமுகித்து
தருணம் வரும்போது தான்வருவேன் இவ்விடத்தில்
என்று உரைத்தார் எம்பெருமான் பொற்சிலைக்கு
அன்று பொற்சிலையும் ஆதியைப் பார்த்தேதுசொல்லும்
அதுவரையும் நான்தான் அவனிதனிலிருந்தால்
ஏதுநீசன் வந்து எந்தனையும் பார்ப்பானே
காளியும் என்னோடு கலந்து இருப்பாளே
ஆழியடைத்த அச்சுதரே சொல்லுமென்று
என்று சிலையும் எம்பெருமாளோ டுரைக்க
அன்று சிலைக்கு அருளுவார் அச்சுதரும்
கலிநீசன் வந்தால் கண்காணாதே போவான்
மலையாதே என்றுவாக்கு மிகக்கொடுத்து
இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று
சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப்
பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே
திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப்
பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி
அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம்
இப்போது சும்மா இங்குவர லாமெனவே
அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல்
நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித்
தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும்
மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக்
கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5281 - 5310 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi