அகிலத்திரட்டு அம்மானை 6901 - 6930 of 16200 அடிகள்
செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
தருவேன் கெதிகள் தருணமிக கேளீர்
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
அத்தருணம் வருவேன் ஆதிசிவ நாராயணரும்
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
வடக்கு உதித்து வருவோம் நாம்தெட்சணத்தில்
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில்
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது
காளி சிறை
மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6901 - 6930 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi