அகிலத்திரட்டு அம்மானை 6721 - 6750 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6721 - 6750 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ
கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க
இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான்
மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட
அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே
மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம்
தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே
எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த
வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ
பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ
வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ
நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து
தேசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே
பழிசெய்த சோழன் பாரக்கடலதிலே
வழிமுழுதும் கல்லெனவே மாறியே நில்லாதோ
பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல்
நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே
பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச்
சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே
கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக்
கொதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல்
ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ
கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே
கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல்
இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே
பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும்
ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம்
மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை
கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi