அகிலத்திரட்டு அம்மானை 5581 - 5610 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5581 - 5610 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை
உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப்
பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண்
யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது
தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி
இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு
மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை
சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில்
சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு
பிள்ளை ஏழும்பெற்று பெருங்கங்கை அவ்வனத்தில்
கள்ளமில்லா சிவனும் கண்ணர்முனி தேவர்களும்
எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு
வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே
அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும்
மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில்
இனிதிருக்கும் போது என்னை நினையாமல்
மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார்
ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய்
வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே
முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல்
வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ
இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி
குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி
வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால்
கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ
மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி
வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி
தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும்
ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே
முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi