அகிலத்திரட்டு அம்மானை 5641 - 5670 of 16200 அடிகள்
மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல்
அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி
வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால்
கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே
என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம்
கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து
வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு
அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு
சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை
இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு
குருபரனேநீரும் கொடுத்தீர் புறத்தோர்க்கு
முப்பறத்தோர் செய்த முடுக்கமது ஆற்றாமல்
அப்புறத்தோர் தம்மை அழிக்க ஒருகோலமதாய்
எண்ணெரிய பீற்றல்ஏற்ற கந்தை துணியுடுத்து
மண்ணிலே யவர்கள் வலுவைமிகக் குறைக்க
என்னென்ன பாடுயான் பட்டேன் அப்பாலும்
பொன்னான ஈசுரரே பூரித் தெரிந்தீரே
பொதுவாய் நிறைந்த புண்ணியரே இப்போது
எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு
கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால்
சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ
மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும்
பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென
வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே
பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான்
மற்றப் பிறவி யாக வகுத்தாலும்
இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு
அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே
மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம்
தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5641 - 5670 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi