அகிலத்திரட்டு அம்மானை 6511 - 6540 of 16200 அடிகள்
வன்னமது பூகம் வாசமது விருச்சம்
தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம்
ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம்
சோதி விருச்சம் சுபசோபன விருச்சம்
தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம்
ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும்
வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில்
சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம்
வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக
ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய்
வானமீதிலிருக்கும் வளர்நிலவும் சூரியனும்
தானமது மாறாமல் தான்வருகும் தியதியிலே
உவரியிலே தோன்றும் உயர்தரும அப்பதிதான்
கவரமுடியாது கண்காணா திருப்பதினால்
சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய்
சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும்
வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள்
ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள்
மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய்
இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி
பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப்
புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார்
மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும்
தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம்
நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம்
இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச்
செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 6511 - 6540 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi