அகிலத்திரட்டு அம்மானை 5071 - 5100 of 16200 அடிகள்
வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது
அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும்
எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை
எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும்
அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை
பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து
மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து
ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்
கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு
வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான்
உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும்
என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும்
சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது
வாணாள்க் கிடறு வருமடா மாநீசா
தீத்தனலைச் சேர்த்து சிவகங்கையில் பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைத்துன்னை சாபமிட்டால்
வான மிடியாலும் வான மழையாலும்
ஆன கடலாலும் அக்கினி தன்னாலும்
நாட்டை முடிக்குமடா நல்ல சாணாத்திகற்பு
கோட்டை இடியுமடா கோத்திரங்கள் தான்முடியும்
சேனையழியுமடா உன் செல்வமது குன்றுமடா
வான நட்சத்திரத்திரத்தாலும் வம்மிசங்கள் தான்முடியும்
என்று கலிநீசனுக்கு எம்பெருமாள் கூறிடவே
அன்று அந்த கலியன் அதற்கேது சொல்லலுற்றான்
உன் சாபமானாலும் உயர்காளி சாபமானாலும்
கன்னி சாபமானாலும் கபாலி சாபமானாலும்
சிவ சாபமானாலும் சக்தி சாபமானாலும்
சிவ செந்தெல்லாம் சேர்ந்து சாபமிட்டாலும்
என்றினிடத்தில் எள்ளளவும் வாராதே
வந்தாலும் அணுகாதே சிவமூல கருவிருக்கு
என்று கலியுரைத்தான் எம்பெருமாள் அச்சுதற்கு
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5071 - 5100 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi