அகிலத்திரட்டு அம்மானை 5311 - 5340 of 16200 அடிகள்
வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி
வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க
நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார்
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க
விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்
வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன்
நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப்
பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான்
மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல்
தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து
ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப்
பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக்
கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச்
சாதி வரம்பு தானழித்து மாநீசன்
மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து
நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான்
எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி
பிரித்து இறையைப் பிச்சாதனுப் பெனவே
விரித்து வுரைத்து வெண்ணீச னானவனும்
ஆனபரி கூட்டி அவன்நடந்து போயினனே
ஈனகலி ராசன் இவன் சட்டமும் மாற்றி
ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப்
பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி
நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத்
தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது
மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள்
ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே
தேவர் முறையம்
தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி
மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை
ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5311 - 5340 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi