அகிலத்திரட்டு அம்மானை 5131 - 5160 of 16200 அடிகள்
தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால்
பொல்லாங்கு செய்யாமல் புவியாளு என்றனரே
அல்லாமல் சான்றோர்கள் அபயமிடும் ஒலிகள்
என்னாலே கேட்டு இங்கிருக்க முடியவில்லை
மண்ணாண்டிருந்த மாகாளி மக்களல்லோ
சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு
நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக்
காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு
ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால்
அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால்
பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய்
கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால்
அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா
சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்
கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5131 - 5160 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi