அகிலத்திரட்டு அம்மானை 5551 - 5580 of 16200 அடிகள்
தானீ தமான சர்வபர நாரணரே
இந்த விதமாய் இகபர விதத்தோடும்
உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ
அப்படியே நீரும் ஆதிநா ராயணராய்
முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே
கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும்
ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும்
கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர்
மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும்
வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும்
நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும்
இப்படியே மேலோகத் தெல்லாரையும் வருத்தி
அப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக்
கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல்
சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம்
எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும்
வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச்
செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு
மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது
இன்றுமுதல் உம்முடைய இச்சையது போலே
மன்று பதினாலும் மாயனொரு சொல்லுக்குள்ஆள
எல்லா முமது இச்சையது போல்நடத்தும்
சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று
மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப்
பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை
அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார்
எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை
நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய
ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள்
முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 5551 - 5580 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi