அகிலத்திரட்டு அம்மானை 4711 - 4740 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4711 - 4740 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாடையறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன்
தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன்
ஆளவை குண்டம் அரசுமே டையறியேன்
இத்தனைகள் தானறியா(து) எண்ணமது நானறியேன்
புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம்
மாயக் கலியறுத்து வாய்த்தநா டாள்வார்க்கு
ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித் தர்மமதாய்
இராச்சியத்தை யாளவைத்து இத்தனையு மேற்பதல்லால்
இராம கோவிந்தா என்றாலும் எள்ள்ளவும்
அதற்குமுன் பூசை புனக்காரமுத லேற்பதில்லை
இதற்குமுன் னேற்பவர்கள் எனக்காகா தேபோவார்
என்றந்தக் கேத்திரனுக்(கு) இத்தனையுந் தான்கூறி
அன்றந்த நீசன் அவ்வூரி லெம்பெருமாள்

புலச்சிக்கு அருளியது


நீச னிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான்
தேச மறிய செச்சை புலச்சிகண்டு
ஒளித்தா ரொருஇடத்தில் ஊர்தேச முமறிய
விழித்தாள் புலச்சி விதமறிந் தெல்லோரும்
ஸ்ரீரங்கமீதிருந்து சிறந்து வந்த வேதியனும்
தீவாங்கி புலச்சியிடம் தீபாராதனைக் கொடுக்க
நீச னறிந்து நெருங்கமணி மேடைவைத்து
வீசை முறுக்கி விசையாக அந்நீசன்
கோவில் சிவாலயங்கள் கொந்துகொந் தாயமைத்துப்
பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே
மேடைக்குக் கால்கள் மிகுத்தத்தங்கத் தால்நிறுத்தி
வாடைக் கமகமென வாத்தியங்கள் நின்றதிர
தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்கப்
பாவக் குடும்பத்தோர் பண்ணினார் பூசையது
நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து
பம்பைப் பரத்தை பகட்டுக்கை காட்டலோடு
நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi