அகிலத்திரட்டு அம்மானை 7051 - 7080 of 16200 அடிகள்
பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
இப்படியேநான் உன்னருகே வருவேன்காண்
அப்படியே அங்கிருந்து அன்றுதவசு பண்ணி
நாரணரை வைகுண்டராய் நல்மகவாய் எடுத்து
சீரான தெட்சணத்தில் சிறையுமிருக்க வைத்து
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன்
திடமான கோவே செய்ய மணிவிளக்கே
என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய
என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே
என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது
அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச்
சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள்
வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 7051 - 7080 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi