அகிலத்திரட்டு அம்மானை 6781 - 6810 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6781 - 6810 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால்
ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம்
நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும்
எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே
மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத்
தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து
ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத்
தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல்
உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய்
வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக்
குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும்
நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால்
குன்றுமலைக் கேகாமல் கோதைநாங்கள் தவமிருந்தோம்
இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும்
அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக்
கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி
மத்த தேசமும் மாயன் திருப்பதியும்
அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும்
துரைசாணி அய்யா துய்ய நாரயணரே
எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம்
மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது
என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும்
அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று
என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே
வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார்
பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி
எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி
ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை
நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும்
துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi