அகிலத்திரட்டு அம்மானை 5401 - 5430 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5401 - 5430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி
தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல்
நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே
சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப்
பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும்
படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல்
குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல்
இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே
அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே
எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே
சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது
கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான்
அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே
ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி
மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும்
என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே
அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார்
சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால்
எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில்
உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து
சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான்
நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை
ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான்
செய்யோ என்தலையில் மேவி எழுதினானோ
அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக்
கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு
ஐயோ நீஎன் தங்கையராய் ஆதியிலே பிறந்த்தினால்
ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான்
மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும்
கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi