அய்யாவழி தர்மம் மற்றும் சமயப் பார்வை



அய்யாவழி தர்மம் மற்றும் சமயப் பார்வை

தர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் ஜீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.

தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை "தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்.என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர் வலியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம்.

அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. "பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ.என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது.

சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவேதயாம்.

ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான 'இருப்பதனைத்தும் ஒன்று' என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது.

அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"சாதி பதினெட்டையும் தலையாட்டிப்பெய்களையும் வாரிமலை வன்னியில் தள்ளி அழித்துவிடு.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu