அகிலத்திரட்டு அம்மானை 1711 - 1740 of 16200 அடிகள்
வாயு பகவான் வடிவுமிகப் போலே
ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல்
கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு
விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை
இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி
பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம்
என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து
வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை
மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து
குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும்
கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில்
மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை
வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி
அந்தப் பரமே சுரனா ரவரறிந்து
கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன
மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன
பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன
அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன்
ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க
சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார்
விருத்தம்
வாடியே மடவார் தாமும் மார்பதில் துகிலை மூடி
கோடியே அயர்ந்து ஏங்கிக் குருவதைப் பாரா வண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்ற தன்மை
தேடியே மாயன் செய்தச் செயலென அறிந்தா ரீசர்
விருத்தம்
அறிந்தார் மாயன் சேயாகி அழுதே இரங்குங் குரலதினால்
செறிந்தார் குழலார் இவர்கள் சென்று சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தே யிவர்கள் நாணினதும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி யிருவரையும் அழித்தே பிறவி செய்தனராம்
விருத்தம்
பிறவி யதுதான் செய்யவென்று பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள்
அறவி யழுது முகம்வாடி அரனா ரடியை மிகப்போற்றித்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1711 - 1740 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi