அகிலத்திரட்டு அம்மானை 1051 - 1080 of 16200 அடிகள்
சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி
உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும்
தாணரே உம்மோடிருக்கும் சத்திபெண்ணையும்தாரும்
துடுக்கனிவன் கேட்ட சுத்தவரமத்தனையும்
கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி
அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி
சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி
அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே
கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில்
கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல்
அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து
கர்ம விதியால் கைமறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று
இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம்
அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார்
ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும்
நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக்
கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே
விருத்தம்
ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1051 - 1080 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi