அகிலத்திரட்டு அம்மானை 1021 - 1050 of 16200 அடிகள்
வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை
அப்போது ஈசர் அரக்கன்தனைப் பார்த்து
இப்போது நீயும் வாவெனவே தானழைத்து
நரகக்குழியை விட்டு நற்கயிலை வரும்வழியில்
கரங்குவித்து மேதை கண்ணரைக் குவித்திருந்தாள்
இச்சித்து இராவணனும் இவளைத் தொடருகையில்
அச்சமில்லா மேதை அரக்கனுக்கு சாபமிட்டாள்
என்தவசை அழித்து எனைத்தொடர்ந்த ஏதுவினால்
உன்ஆள்வதை படவே என்னை யெடுத்டதுப்போவாய்
என்றுசபித்து எரியதிலே தான்விழுந்தாள்
அன்றந்த அக்கினியும் அவள் தவசைப்பார்த்து
அக்கினிதேவி அவளை வளர்த்து வந்தாள்
வேதவதி
அக்கினிக்குள் மேதை அருந்தவசு பண்ணலுற்றாள்
அப்போது ராவணனும் ஆதிசிவனிடத்தில் வந்து
இப்போது எந்தனக்கு ஏற்றவரம் தாருமென்றான்
தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச்
சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை
காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே
ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள்
தருவோ மெனவே தந்தி முகன்பேரில்
உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க
சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது
மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச்
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1021 - 1050 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi