அகிலத்திரட்டு அம்மானை 4081 - 4110 of 16200 அடிகள்
கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான்
மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான்
வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான்
மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான்
ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான்
அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான்
குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது
பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து
தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான்
கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத்
தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப்
பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து
மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை
கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம்
அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே
சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும்
தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான்
மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி
தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள
நந்திவரவு
தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள
மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால்
ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு
வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து
மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன்
ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே
என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க
அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது
அப்போது நந்தி அரிஅரனையும் போற்றி
செப்போடு ஒத்தசிவ சக்தியையும் போற்றி
நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 4081 - 4110 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi