அகிலத்திரட்டு அம்மானை 3931 - 3960 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3931 - 3960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார்
இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில்
செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில்
நந்த கோபால நாராய ணாவெனவே
மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய்
ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள்
பக்கமதில் எங்களையும் வைத்துபதவி தரவேணுமென்று
நிக்கவேதவசு நீலவண்ணர் உண்டெனவே
ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென
வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும்
விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும்
கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே
அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க
இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்

போகமுனி தவசு

போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று
வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில்
ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi