அகிலத்திரட்டு அம்மானை 2431 - 2460 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2431 - 2460 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே
அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து
இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும்
வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா
என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப்
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று
வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே
காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி
எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும்
மலைக ளசைந்து மடமடென ஓசையிடும்
கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே
இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள்
தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும்
வேழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi