அகிலத்திரட்டு அம்மானை 1621 - 1650 of 16200 அடிகள்
தோராத மன்னன் துடியானச் சேவகன்தான்
ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை
வருக அழைத்து வகையே தெனக்கேட்க
நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க
ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே
அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான்
கையால முள்ள கும்பகர்ண னொருசமரில்
பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான்
அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக்
கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன்
என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண்
ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும்
ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில்
என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும்
அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார்
செந்தமிழ் சேர்மாயன் சிவனாரையும் பணிந்து
எந்தனக்கேற்ற ஈரஞ்சாயிரமடவை
கன்னியராயெனக்கு கவரியிடநீர்படையும்
பன்னீர்குணம் போல்பைம்பொன்னிறத் தக்கவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்காண் ஈசுரரே
லட்சுமியைப் பூமாதேவி யெனவகுத்து
கச்சியா யென்னைக் கருணையுடன் படையும்
வாயரமுள்ள வாய்த்ததெய்வ ரோகினியை
தாயாகப் பெண்கள் தான்படைக்க வேணுமென்றார்
படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச்
சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும்
துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத்
தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும்
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 1621 - 1650 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi