அகிலத்திரட்டு அம்மானை 1561 - 1590 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1561 - 1590 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன்
ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது
தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து
என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு
ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய்
ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது
நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது
பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில்
அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே
ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை

விருத்தம்

உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும்
என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப்
பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி
அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே

விருத்தம்

என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று
தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப்
பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து
இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை

நடை

என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை
உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது
என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய்
உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன்
என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன்
கொன்றாரே ராவணனின் குறைஉயிரை அம்மானை
அன்றுமேதை சிறையை அரிராமருமாற்றி
வென்ற இலங்கைதனை விபீசணனுக்கு பட்டங்கட்டி
அன்றுஇலங்கை விட்டு எல்லோரும் கடல்கடந்து
அயோத்தியாபுரிக்கு அவர்வருகும் வழிதனிலே
கைபிடித்த ஜானகியும் கனலாறாய் தான்வரவே
மேதையும்வந்து மேவியாற்றிலிறங்க

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi